ADDED : ஜூன் 06, 2024 11:20 PM
பெ.நா.பாளையம்:சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், காளையனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
யானைகளை கட்டுப்படுத்த, வனத்துறை சார்பில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தடாகம் குட்டை வழியே வந்த யானைகள் அங்கிருந்த தென்னங்கன்றுகளை சேதப்படுத்திவிட்டு, அப்பகுதியில் இருந்த வீரபாண்டி புதூர் சாலையை கடந்து சென்றன.
அப்போது, அப்பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் ஒன்றாக கூடி, யானைகளை பார்த்து தொடர்ந்து குரைத்தன.
நாய்கள் சத்தம் காரணமாக யானைகளின் வரவை உணர்ந்த பொதுமக்களும் வீடுகளில் விளக்குகளை ஒளிர செய்தனர். இதையடுத்து யானைகள் மலையடிவாரம் நோக்கி ஓடின.