/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மது அருந்திய டாக்டர் திடீரென உயிரிழப்பு மது அருந்திய டாக்டர் திடீரென உயிரிழப்பு
மது அருந்திய டாக்டர் திடீரென உயிரிழப்பு
மது அருந்திய டாக்டர் திடீரென உயிரிழப்பு
மது அருந்திய டாக்டர் திடீரென உயிரிழப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:53 PM
கோவை:மது அருந்திய கோவை அரசு மருத்துவமனை டாக்டர், புரை ஏறி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது குப்லே, 27; டாக்டர். கோவை அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த, 6ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய டாக்டர் ஷேக் முகமது குப்லே, மது அருந்தினார். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். வாந்தி எடுக்கும்போது புரை ஏறியது.
அவரது மனைவி சைலாபானு, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஷேக் முகமது குப்லேவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று ஷேக் முகமது குப்லே உயிரிழந்தார்.
அவரது தாயார் ஷேக் ரிஸ்வானா அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.