ADDED : ஜூலை 06, 2024 12:29 AM
கோவை;கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, தி.மு.க., வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக, வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் நேற்று, ஐந்தாவது நாளாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து நீதிமன்றங்களிலும், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க., வக்கீல் அணியினர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.