/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட கிரிக்கெட் லீக் யங் பிரண்ட்ஸ் அணி வெற்றி மாவட்ட கிரிக்கெட் லீக் யங் பிரண்ட்ஸ் அணி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் லீக் யங் பிரண்ட்ஸ் அணி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் லீக் யங் பிரண்ட்ஸ் அணி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் லீக் யங் பிரண்ட்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூன் 12, 2024 01:23 AM
கோவை:மாவட்ட அளவிலான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும், 'எல்.ஜி., எக்யூப்மென்ட்ஸ் கோப்பைக்கான' நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் கோயம்புத்துார் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த யங் பிரண்ட்ஸ் அணிக்கு சரண்ரான் (36), வீரமணி (41), சரத்குமார் (32) ஆகியோரின் ஆட்டம் கைகொடுக்க, 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணி சார்பில், நிகில் மூன்று விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணியினர், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுக்க, யங் பிரண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணிக்காக சிறப்பாக பந்து வீசி, சூர்ய பிரகாஷ் நான்கு விக்கெட் மற்றும் ரூபக் குமார் மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர்.