/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்கல் பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்கல்
பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்கல்
பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்கல்
பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 06, 2024 11:19 PM

மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, அரசு பள்ளிகள் திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திலும், மேட்டுப்பாளையம் நகரிலும் மொத்தம், 123 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் வருகிற 10ந் தேதி திறக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், 'காரமடை ஒன்றியம், மேட்டுப்பாளையம் நகரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வந்துள்ளன. அந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும், அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வருகிற பத்தாம் தேதி, பள்ளி திறக்கும் நாளில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். மேலும் வகுப்பு அறைகளையும், பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.