/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடைபாதையில் புற்கள் பொமக்கள் அதிருப்தி நடைபாதையில் புற்கள் பொமக்கள் அதிருப்தி
நடைபாதையில் புற்கள் பொமக்கள் அதிருப்தி
நடைபாதையில் புற்கள் பொமக்கள் அதிருப்தி
நடைபாதையில் புற்கள் பொமக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 27, 2024 02:20 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் நடைபாதையில் புற்கள் நிறைந்து இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட சிங்கராம்பாளையம், 8வது வார்டு, புதுக்காலனியில், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இப்பகுதி மக்கள் சென்று வர ரோட்டில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது. இதில், பயணித்து வந்தனர்.
இப்பகுதி மக்கள், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு செல்லவும் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி, புற்கள் முளைத்து ஒத்தையடி பாதை போன்று காட்சியளிக்கிறது. இதனால், இந்த வழியில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து செல்ல அச்சப்படுகின்றனர்.
இதனால், இவ்வழியை தவிர்த்து சிங்கராம்பாளையம் ரோடு வழியாக, சர்வீஸ் ரோட்டை அடைகின்றனர். மக்கள் நலன் கருதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள புற்களை அகற்ற, 'பேவர் பிளாக்' கற்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.