Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பணி நிரவல் அரசாணையால் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி  உடற்கல்வியை புறக்கணிக்கிறதா தமிழக அரசு, ஆசிரியர்கள் கேள்வி 

பணி நிரவல் அரசாணையால் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி  உடற்கல்வியை புறக்கணிக்கிறதா தமிழக அரசு, ஆசிரியர்கள் கேள்வி 

பணி நிரவல் அரசாணையால் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி  உடற்கல்வியை புறக்கணிக்கிறதா தமிழக அரசு, ஆசிரியர்கள் கேள்வி 

பணி நிரவல் அரசாணையால் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி  உடற்கல்வியை புறக்கணிக்கிறதா தமிழக அரசு, ஆசிரியர்கள் கேள்வி 

ADDED : ஜூலை 05, 2024 02:34 AM


Google News
கோவை;உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் பணி நிரவல் தொடர்பான அரசாணையை திரும்ப பெற வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த, 1997ம் ஆண்டு வெளியான அரசாணை 525ல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற எண்ணிக்கையில் ஆசியர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. பொதுவாக, 700க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு மூவர் என்ற கணக்கில் பணியமர்த்தப்பட்டர்.

இந்நிலையில், 1997ம் ஆண்டு வெளியான அரசாைணையில் திருத்தம் செய்து, 250 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், 400 மாணவர்களுக்கு உடற்கல்வி இயக்குனர் நிலை 1 வேண்டும் என்பது உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருநு்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த, 1ம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரவல் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 700க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், 700க்கும் அதிகமான மாணவர்கள் இருக்கும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 மாணவர்கள் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர், ஒரு உடற்கல்வி ஆசிரியர், 1500க்கும் மேல் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர், 2 உடற்கல்வி ஆசிரியர்கள் என பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், எந்தெந்த பள்ளிகளில் உபரி பணியிடங்கள் உள்ளது என்பதை எமிஸ் தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து பணி நிரவல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணை, உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசாணையை திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால், நீதி மன்றம் செல்வோம் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக பல்வேறு புதிய நலத்திட்டங்களை கொண்டு வருகிறோம் என கூறிக்கொள்ளும் தி.மு.க., அரசு பள்ளி அளவில் மாணவர்களின் உடற்கல்வியை மறைமுகமாக புறக்கணக்கிறது என்ற கருத்தும் பரவாலக உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன், அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தி.மு.க., அரசு தெரிவித்தது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டவில்லை. தற்போது, ஏற்படுள்ள அழுத்தத்தில், ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், பணி நிரவல் செய்ய ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களின் ஒழுக்கதிலும், விளையாட்டு திறனை வளர்ப்பதிலும் அதிகபடியான கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டால் அது மாணவர்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு ஆசிரியர் 700 மாணவர்களை கவனிப்பது சிரமம். அதிலும், மாணவ - மாணவியர் ஒன்றாக பயிலும் பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது மிகவும் சிரமம். மாணவர்களின் உடற்கல்வி, ஒழுக்கம் உள்ளிட்டவை பாதிப்படையும். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். மேலும், 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் வீதம் பணி வழங்க வேண்டும்,'' என்றார்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 40 வகுப்புகள்

700 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்கள் என்ற கணக்கில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் 40 வகுப்புகளும் எடுக்கும் நிலை ஏற்படும். மேலும், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்கள் உடற்கல்விக்காக மைதானத்திற்கு வரும் நிலை ஏற்படும். இதனால், உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் பாதிக்கப்படுவர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us