/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி! குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!
குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!
குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!
குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!

'தெளிவான மனநிலை'
சஞ்சய்குமார், வடவள்ளி: இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்துள்ளேன். என்ன படிக்கலாம் என முடிவு செய்து இருந்தாலும், குழப்பான மனநிலையிலேயே இருந்தேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால், எந்த துறையை தேர்வு செய்யவேண்டும் என்ற தெளிவு கிடைத்தது.
'அரசு தேர்வுகள் அறிந்தோம்'
சதீஷ், கோவை: என் மகளை கோவையில் ஒரு கல்லுாரியில் தேர்வு செய்து படிக்க வைத்தால் போதும் என நினைத்தேன். ஆனால், சிறந்த கல்லுாரி கிடைத்தால் எங்கு சென்று வேண்டுமானலும் படிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவம் புரிந்துகொண்டேன்.
'சந்தேகங்களுக்கு தீர்வு'
மோகனபிரவீனா, கருமத்தம்பட்டி: கல்லுாரிகளின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்யவேண்டும், டயர் 1, டயர் 2 கல்லுாரிகளின் வேறுபாடு போன்றவற்றை தெரிந்து கொண்டேன். சாய்ஸ் தேர்வு செய்வது குறித்த, பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.
'தன்னம்பிக்கை பேச்சு'
லாவண்யா, காரமடை: சாய்ஸ் தேர்வில் எதுபோன்ற தவறுகள் நடக்கும், கவனக்குறைவால் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற தகவல்கள், மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருந்தது. கல்வியாளர் அஸ்வின் பேச்சு, தன்னம்பிக்கை அளித்தது.
'புரிதல் பிறந்தது'
வித்யா, கோவை: கல்லுாரி தேர்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்து தெளிவாக புரிந்துகொண்டேன். கேம்பஸ் இன்டர்வியூ, இன்டர்ன்ஷிப், திறன் மேம்பாடு, கூடுதல் சான்றிதழ் படிப்பு, வேலைவாய்ப்பில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு போன்றவற்றை அறிந்துகொண்டேன்.
'தவறை புரிந்துகொண்டேன்'
நிதர்ஷினி, துடியலுார்: என் வீட்டின் அருகிலேயே நான்கு கல்லுாரிகள் இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் என திட்டமிட்டு இருந்தேன். துாரமாக இருந்தாலும் நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்தால் மட்டுமே, எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, இப்போது புரிந்து கொண்டேன்.