/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி சி.எம்.சி., காலனி மக்கள் தர்ணா போராட்டம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி சி.எம்.சி., காலனி மக்கள் தர்ணா போராட்டம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி சி.எம்.சி., காலனி மக்கள் தர்ணா போராட்டம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி சி.எம்.சி., காலனி மக்கள் தர்ணா போராட்டம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி சி.எம்.சி., காலனி மக்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 02, 2024 11:06 PM

கோவை:சில்லறை மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு, தங்களுக்கான குடியிருப்பை கட்டித் தரக்கோரி, மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சி.எம்.சி., காலனி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்கடம், சி.எம்.சி., காலனியில் வசித்து வந்தவர்கள், ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளுக்காக கடந்த 2018ல் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட்டில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.
கையகப்படுத்தப்பட்ட இடத்தில், எஞ்சியுள்ள பகுதியில், மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில், 2 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
மீதமுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு, அங்குள்ள சில்லறை மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் ஒன்றரை ஆண்டகளில் கட்டித் தரப்படும் என, மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் கழிந்தும், சில்லறை மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக சில்லறை மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்து, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என, சி.எம்.சி., காலனி குடியிருப்புவாசிகள் நேற்று, மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர், 'விரைவில் சில்லறை மீன் மார்க்கெட்டை, உரிய அரசாணை மூலம் இடமாற்றம் செய்து, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என உத்தரவாதம் அளித்தனர்.
இதையடுத்து, குடியிருப்புவாசிகள் கலைந்து சென்றனர்.