Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கற்க சிரமப்படும் குழந்தைகள் உதவ மேம்பாட்டு மையம்

கற்க சிரமப்படும் குழந்தைகள் உதவ மேம்பாட்டு மையம்

கற்க சிரமப்படும் குழந்தைகள் உதவ மேம்பாட்டு மையம்

கற்க சிரமப்படும் குழந்தைகள் உதவ மேம்பாட்டு மையம்

ADDED : ஜூலை 28, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
கோவை;அறிவுசார் குறைபாடுகள் மற்றும் கற்றல் சிரமங்களை கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஆரம்ப கால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.

'ஹெல்த் பேசிக்ஸ்' உடன் இணைந்து, கற்றல் சிரமங்களை கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இம்மையம் துவங்கப்பட்டுள்ளது.

சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ரமணி, மையத்தை துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், முதன்மை நடவடிக்கை அதிகாரி சுவாதி, கோவை ப்ளே ஸ்கூல் உரிமையாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளை இந்த மையம் வழங்கவுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை, வீட்டிலேயே மேம்படுத்துவதற்கான உத்தி கற்பிக்கும் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us