கோவை;அடிப்படை வசதிகள் கோரி, புல்லுக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புல்லுக்காடு பகுதியில், செயல்படும் மாநகராட்சி குப்பை கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நாய்களுக்கான கருத்தடை மையம் ஆகியவற்றை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொது செயலாளர் காதர் தலைமை வகித்தார்.