/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் வினியோகம் பாதிப்பு; குப்பை தேக்கம்! ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல் குடிநீர் வினியோகம் பாதிப்பு; குப்பை தேக்கம்! ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு; குப்பை தேக்கம்! ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு; குப்பை தேக்கம்! ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு; குப்பை தேக்கம்! ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
ADDED : ஜூன் 28, 2024 11:42 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்கள், வாட்டர்மேன் பற்றாக்குறையால், குடிநீர் வினியோகமும், குப்பை அகற்றுவதும் பாதிக்கிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நாள்தோறும் குப்பை அகற்றம் செய்ய தூய்மை பணியாளர்களும், பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய, வாட்டர்மேன் போன்ற பணியாளர்களும் உள்ளனர்.
ஊராட்சியில், 150 வீடுகளுக்கு, ஒரு தூய்மை பணியாளர் என்ற முறையில், மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்கள் உள்ளனர். சில ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. இதனால், குப்பை தேங்குகிறது.
மேலும், ஊராட்சிகளில் உள்ள தண்ணீர் தொட்டியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வாட்டர்மேன்கள் உள்ளனர். இதில், வாட்டர்மேன் பணிக்கு வரவில்லை என்றால், அந்த இடத்தை நிரப்ப பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதில், வாட்டர்மேனுக்கு, 4,400 ரூபாயும், தூய்மை பணியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தில், காலி இடத்தை நிரப்புவது பெரும் சிரமமாக உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கூறியதாவது:
ஊராட்சிகளில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் இல்லை. குறைந்த அளவே உள்ளனர். வாட்டர்மேன் வேலையை விட்டு சென்றாலோ, இறப்பு நேரிட்டாலோ அந்த இடத்தை நிரப்புவதில்லை. இதை சரி செய்ய ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை.
இதே நிலை தான் தூய்மை பணியாளர்கள் நிரப்புவதிலும் நிலவுகிறது. மேலும், இவர்களுக்கு வழங்கும் சம்பளமும் குறைவாகவே உள்ளது.
நூறு நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வாங்கும் சம்பளம் கூட அதிகமாக உள்ளது. ஆனால், ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது. காலி உள்ள வாட்டர்மேன் மற்றும் தூய்மை பணியாளர் பணியிடங்களை நியமிக்க ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் வரை பேசப்பட்டுள்ளது. ஆனால், எந்த தீர்வும் இல்லை. எனவே, ஊராட்சி பணிகளுக்கு வாட்டர்மேன் அல்லது தூய்மை பணியாளர்களை கூடுதல் சம்பளத்துடன் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம், குப்பை அகற்றும் பணியில் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு, கூறினர்.