/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் கிரைம் 'பாடம்' கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் கிரைம் 'பாடம்'
கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் கிரைம் 'பாடம்'
கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் கிரைம் 'பாடம்'
கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் கிரைம் 'பாடம்'
ADDED : ஜூலை 09, 2024 11:07 PM

கோவை:கோவை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழ் துறைத தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் பேசியதாவது:
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, கல்லுாரி மாணவிகளின் பாதுகாப்புக்காக 'போலீஸ் அக்கா' என்ற திட்டத்தை துவக்கி, செயல்படுத்தி வருகிறார்.
கல்லுாரிகளில் உளவியல் மற்றும் பாலியல் ரீதியாக, மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரிடம், கல்லுாரி நிர்வாகத்திடம் கூற முடியாத நிலையில் உள்ளனர்.
இது போன்ற சூழ்நிலையில், மாணவிகள் கல்லுாரிக்கு என, நியமிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தைரியமாக தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.