/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலக்காட்டில் சைபர் மோசடி கும்பல்; மக்களிடம் மோசடி செய்தது ரூ.11.51 கோடி மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தகவல் பாலக்காட்டில் சைபர் மோசடி கும்பல்; மக்களிடம் மோசடி செய்தது ரூ.11.51 கோடி மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தகவல்
பாலக்காட்டில் சைபர் மோசடி கும்பல்; மக்களிடம் மோசடி செய்தது ரூ.11.51 கோடி மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தகவல்
பாலக்காட்டில் சைபர் மோசடி கும்பல்; மக்களிடம் மோசடி செய்தது ரூ.11.51 கோடி மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தகவல்
பாலக்காட்டில் சைபர் மோசடி கும்பல்; மக்களிடம் மோசடி செய்தது ரூ.11.51 கோடி மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தகவல்
ADDED : ஜூலை 08, 2024 02:03 AM
பாலக்காடு:பாலக்காட்டில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், சைபர் மோசடி கும்பல், மோசடி செய்தது ரூ. 11.51 கோடி என மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், சைபர் மோசடி அதிகரித்து வருவதால், மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு அளிக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:
அதில் அவர் கூறியிருப்பதாவது :
பாலக்காட்டில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், சைபர் மோசடி கும்பல் மோசடி செய்தது ரூ. 11.51 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் முடியும்போது, இம்மோசடி அதிகரித்து வருகிறது.
கடந்த, 2022ல் சைபர் மோசடி வாயிலாக மாவட்டத்திலிருந்து, ரூ.94.72 லட்சம் இழப்பு இருந்தது, 2023ல் அது ரூ.8.71 கோடியானது.
இந்த ஆண்டு, ஆறு மாதம் கொண்டு மட்டும் முந்தைய ஆண்டு கணக்கை விட முந்தியுள்ளது.
மாவட்டத்தில் பதிவு செய்த, 177 சைபர் வழக்குகளில் 166 நிதி மோசடிகள் ஆகும். மோசடிக்கு ஆளானவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி செய்பவர்கள் பலவற்றை கூறி அழைப்பார்கள். மானம் கெட்டு விடும் என்று எண்ணி சொன்னபடி செய்பவர்கள், அவர்களது வலையில் விழுகிறார்கள்.
மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்ததாகவும், சிம் கார்டு குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, போலீஸ் அதிகாரி, சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து அழைப்பார்கள்.
அனுப்பிய பார்சலில் போதை மாத்திரை இருப்பதாக கூறியும் அழைப்பார்கள். வழக்கை தவிர்க்க பணம் கேட்பார்கள்.
பாதி நேர ஆன்லைன் வேலை தொடர்பு கொண்டு மோசடி நடக்கின்றன. முதல் கட்டத்தில் பணம் அளித்து நம்பிக்கை பெற்ற பிறகு, அவர்களது வலைக்குள் சிக்க வைப்பார்கள்.
போலி முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பு கொண்டு, இந்த ஆண்டு இதுவரை, 101 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டில் அழைப்பு மையம் நடத்தும், நாடு முழுவதும் வேரூன்றிய கும்பல் இந்த மோசடியை வழி நடத்துகிறது.
பல வங்கிக்கணக்குகள் வாயிலாக பணம் சேகரித்து, கிடைக்கும் பணம் உடனே மற்ற வங்கி கணக்கிற்கு பரிமாறப்படும். கும்பலை கட்டுப்படுத்தும் நபர், இறுதியில் பணம் ஒட்டு மொத்தமாக வங்கியில் இருந்து பின்பற்றுகிறார்.
பல அடுக்கு மோசடி ஒரு சங்கிலி போன்றது. ஒரு சங்கிலியை பிடித்து அடுத்த சங்கிலியில் எட்டும் முறையில் ஆனது போலீஸ் விசாரணை, சைபர் மோசடி கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் தயாராக உள்ளது.
வங்கி அதிகாரிகளுக்கு, இது தொடர்பாக விழிப்புணர்வு அளித்து உள்ளோம். 552 சைபர் தொண்டர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை உட்படுத்தி 'வாட்ஸ் அப் குரூப்' உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக தகவல்கள் பரிமாறி வருகிறோம்.
பல பிரிவில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளும் அளித்துள்ளோம். ஆன்லைன் மோசடிக்கு ஆளானவர்கள், உடன் நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டலின், 1930 என்ற இலவச எண்ணில் அழைத்து புகாரைப் பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.