/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி ஆலோசனை காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி ஆலோசனை
காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி ஆலோசனை
காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி ஆலோசனை
காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி ஆலோசனை
ADDED : ஜூலை 09, 2024 12:31 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆனைமலை அருகே, சுப்பேகவுண்டன்புதுார் உச்சிமாகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், வேளாண் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தில், காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
காரீப் பருவத்துக்கான பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துணை இயக்குநர் (ஓய்வு) தமிழ்ச்செல்வன், மண் பரிசோதனை செய்து, திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா பயன்படுத்த வேண்டும்.
தக்கைப்பூண்டு, சணப்பை போன்ற பசுந்தாள் பயிர்கள் பயிரிட்டு மடக்கி உழவு செய்து, மண்ணிலே மட்க வைப்பதாலும் அதிகப்படியான ரசாயன யூரியா, பொட்டாஷ் உர பயன்பாட்டை குறைக்கலாம் என விளக்கினார்.
தமிழக அரசால் வழங்கப்படும் மானியங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.