லேப்டாப்கள் திருட்டு
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 25. தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவருடன் கல்லூரி மாணவர் கபிலனும் தங்கி உள்ளார். ஸ்ரீராம் அதிகாலை எழுந்து நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது கபிலன் தூங்கிக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்க்கும்போது அறையில் இருந்த இரண்டு லேப்டாப்கள் காணவில்லை. இது குறித்து, துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒடிசா தொழிலாளி பலி
ஒடிசா மாநிலம், பாலேஸ்வரரைச் சேர்ந்த ஹடிபந்து மகன் சந்திரமணி பத்ரா, 49. இவர் சில மாதங்களாக கரியாம்பாளையம் பிரிவு, காந்தி நகரில் தங்கி, தனியார் பவுண்டரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இருசக்கர வாகனம் திருட்டு
ரத்தினபுரி, புதுத்தோட்டம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன், 24. தச்சு தொழில் செய்து வருகிறார். தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.