/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 70 வயதானோருக்கான கிரிக்கெட்; பொள்ளாச்சி டாக்டர் தேர்வு 70 வயதானோருக்கான கிரிக்கெட்; பொள்ளாச்சி டாக்டர் தேர்வு
70 வயதானோருக்கான கிரிக்கெட்; பொள்ளாச்சி டாக்டர் தேர்வு
70 வயதானோருக்கான கிரிக்கெட்; பொள்ளாச்சி டாக்டர் தேர்வு
70 வயதானோருக்கான கிரிக்கெட்; பொள்ளாச்சி டாக்டர் தேர்வு
ADDED : ஜூன் 06, 2024 07:07 AM

பொள்ளாச்சி, ஜூன் 6-
பொள்ளாச்சியை சேர்ந்த டாக்டர், 70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர் ஜெயக்குமார், இங்கிலாந்தில் நடைபெறும், 70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக உள்ளது. தடகளம், பாக்சிங், கிரிக்கெட் என அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுவேன். கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி உள்ளேன்.
தற்போது, VETERANS CRICKET INDIA (VCI) உலக கோப்பை இந்திய அணிக்காக, 16 பேர் கொண்ட அணியில் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.எனது விளையாட்டு திறமையை பார்த்து, கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்துள்ளதாக தேர்வாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. 70 வயதானோருக்கான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம், 28ம் தேதி நடக்கிறது. 45 ஓவர் போட்டிகளாக நடக்கிறது.
என்னுடன், கோவையை சேர்ந்த ஆனந்தராவ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது, 'நெட் பிராக்டீஸ்' செய்து வருகிறேன். இளைஞர்கள், மற்ற வீரர்களை பார்த்து அவர்களை போன்று ஆட வேண்டும் என நினைக்காமல், திறமையை முக்கியமாக வைத்து, விளையாடினால் வெற்றியாளராக வர முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.