Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'சிப்ஸ்' பயன்படுத்தி விரிசல் தடுக்கலாம்!

'சிப்ஸ்' பயன்படுத்தி விரிசல் தடுக்கலாம்!

'சிப்ஸ்' பயன்படுத்தி விரிசல் தடுக்கலாம்!

'சிப்ஸ்' பயன்படுத்தி விரிசல் தடுக்கலாம்!

UPDATED : ஜூலை 06, 2024 07:45 AMADDED : ஜூலை 06, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
'கனவு இல்லம்' தொடர்பான, வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க இணை செயலாளர் பிரேம்குமார் பாபு. கோழி வலை கட்டி வேலை செய்யும் போது, கலவை மட்டும் கலந்து பூசினால் போதும் என்கிறார்கள்; அப்படி செய்யலாமா?

-சரவணன், துடியலுார்.

கோழி வலை கட்டி வேலை செய்யும் போது, கலவையுடன் 'சிப்ஸ்' என்கிற குருணை ஜல்லியை சிறிது சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது விரிசல்கள் வருவதை தடுக்கலாம். கலவை மட்டும் கலந்து பூசுவதை தவிர்க்கவும்.

கிச்சனில் ஜன்னல் வைக்கும் போது, எவ்வளவு உயரத்தில் வைக்க வேண்டும்?

-தினேஷ், அன்னுார்.

கிச்சனில் ஜன்னல் வைக்கும் போது, வீட்டின் தரை மட்டத்திலிருந்து நான்கு அடி உயரத்திலும், டேபிள் டாப்பிலிருந்து ஒரு அடி உயரத்திலும் அமைக்க வேண்டும்.

காம்பவுண்ட் சுவற்றின் மேல் மட்டத்தில், 'சில் கான்கிரீட்' போட வேண்டுமா?

-அர்ஜுனன், காளப்பட்டி.

கண்டிப்பாக போட வேண்டும். இது, காம்பவுண்ட் சுவரின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துவதுடன், விரிசல்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இம்முறையை வீட்டின் கைப்பிடிச் சுவற்றிலும் பயன்படுத்தலாம்; மிகவும் நல்லது.

காலம் போஸ்ட் மற்றும் எலக்ட்ரிகல் பைப் ஜாயின்ட்களில் விரிசலை தடுப்பது எப்படி?

-சுகுமாரன், கணபதி.

காலம் ஜாயின்ட்கள், பீம் ஜாயின்ட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பைப் உள்ள இடங்களில், பைபர் மெஷ் பொருத்தி, அதன் மீது பூச்சு பூச வேண்டும். இது, அனைத்து ஹார்டுவேர் கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அவ்வாறு செய்யும்போது, விரிசல்களை கண்டிப்பாக தவிர்க்கலாம்.

மொட்டை மாடியில் இருந்து வரும் வெப்பத்தை எவ்வாறு தடுக்கலாம்? -

--காளிச்சாமி, குனியமுத்துார்.

மொட்டை மாடியில் சிப்ஸ் தளம் அமைத்தவுடன், அதன் மேல் கூல்ருபிங் டைல்ஸ் அமைத்து மேலிருந்து வரும் வெப்பத்தை குறைக்கலாம். டைல்ஸ் ஒட்டும் பொழுது, டைல்ஸ்க்கிடையே 3 எம்.எம்., இடைவெளியை வைத்து ஒட்டி, அதன் இடைவெளிக்கு எப்பாக்ஸி என்னும் மெட்டீரியல் கொண்டு, பேக்கிங் செய்வதன் வாயிலாக, நீர் உட்புகுவதை தடுக்கலாம். அதேபோல், டைல்ஸ் பெயர்ந்து வருவதையும் தடுக்கலாம். கூலிங் பெயின்ட் அடித்தும் வெப்பம் குறைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us