/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்து இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி திட்டம் பத்து இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி திட்டம்
பத்து இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி திட்டம்
பத்து இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி திட்டம்
பத்து இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி திட்டம்
ADDED : மார் 13, 2025 05:58 AM

கோவை; மாநகராட்சி பகுதிகளில் இந்தாண்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தவிர, மேம்பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தவிர்க்க தமிழர்களின் பாரம்பரியம், தொழில், கலை சார்ந்த அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி ரோடு, சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரை, 1.5 கி.மீ., நீளத்திற்கு மையத்தடுப்பு பகுதிகளில், தனியார் பங்களிப்புடன் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது.
திருச்சி ரோடு, அல்வெர்னியா பள்ளி அருகே பாலம் முடியும் வரை, மையத்தடுப்பு பகுதியிலும் செடிகள் நடப்படவுள்ளன. இந்தாண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.