/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திட்டங்களுக்கு நிதி திரட்ட கடன் பத்திரம்!வெளியிடுகிறது மாநகராட்சி திட்டங்களுக்கு நிதி திரட்ட கடன் பத்திரம்!வெளியிடுகிறது மாநகராட்சி
திட்டங்களுக்கு நிதி திரட்ட கடன் பத்திரம்!வெளியிடுகிறது மாநகராட்சி
திட்டங்களுக்கு நிதி திரட்ட கடன் பத்திரம்!வெளியிடுகிறது மாநகராட்சி
திட்டங்களுக்கு நிதி திரட்ட கடன் பத்திரம்!வெளியிடுகிறது மாநகராட்சி
ADDED : ஜூலை 27, 2024 11:14 PM

கோவை:கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, 150 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, கடன் பத்திரம் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் பிரதான வருவாய். இவை தவிர, காலியிட வரி, தொழில் வரி, தொழில் உரிமம், குத்தகை மற்றும் ஏல இனங்கள் வாயிலாகவும் வருவாய் ஈட்டப்படுகிறது. இவ்வகையில், ஆண்டுக்கு, 3,500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படும்.
நடப்பு (2024-25) நிதியாண்டில் உத்தேசமாக ரூ.3,182.21 கோடி வருவாய் கிடைக்கும்; ரூ.3,300.43 கோடி செலவினம் ஏற்படலாம்; ரூ.118.22 கோடி பற்றாக்குறை ஏற்படும் என, பட்ஜெட் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் நிதி ஒதுக்கும்; மானிய நிதியும் வழங்கும். இருப்பினும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, 150 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, கடன் பத்திரங்கள் வெளியிட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
அதாவது, மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 125 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்கு நிதி திரட்ட கடன் பத்திரம் வெளியிடப்படுகிறது.
கமிஷனர், துணை கமிஷனர்கள், நகர பொறியாளர் மற்றும் உதவி கமிஷனர் (கணக்கு) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படும். இதுதொடர்பான தீர்மானம் மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.