/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தளி ரோட்டில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் தளி ரோட்டில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
தளி ரோட்டில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
தளி ரோட்டில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
தளி ரோட்டில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்

நிரம்பி வழியும் சாக்கடை
பொள்ளாச்சி நகர, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள சாக்கடை நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் அங்கு சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிமீறும் வாகனங்கள்
வால்பாறை நகரை, ஒட்டியுள்ள இந்தியன் வங்கி எதிரில், விதிமுறையை மீறி அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் செல்லும் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றம் தேவை
வால்பாறை நகர், காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளால், மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் நகராட்சி அதிகாரிகள், இதை கவனித்து மக்கள் நலன் கருதி உடனடியாக அகற்ற வேண்டும்.
கால்வாய் சேதம்
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளதால் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சுகாதாரம் பாதிப்படைகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
வேகத்தடையில் கோடுகள் இல்லை
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறிச்செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டுநர்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அமைக்க வேண்டும்.
விபத்து அபாயம்
உடுமலை - பழநி ரோட்டில், ஐஸ்வர்யா நகர் பிரிவு அருகே, பெரும் பள்ளம் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறந்த வெளி கழிப்பிடம்
உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் ரேஷன் கடை, வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை பொதுமக்கள் திறந்த வெளிக்கழிப்பிடமாக மாற்றிவிட்டதால், மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சத்திரம் வீதியில் சரக்கு வாகனங்கள் ரோட்டில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆக்கிரமித்து நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் ரோட்டோரம் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் விதிமுறை பின்பற்றி நிறுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த ரோடு
உடுமலை, ஐஸ்வர்யா நகர் பகுதியில் ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குண்டுகுழியாக இருக்கம் ரோட்டினால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. நகர ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.