/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நத்தம் பத்திரப்பதிவு செய்ய தடை பதிவுத்துறை அமைச்சரிடம் புகார் நத்தம் பத்திரப்பதிவு செய்ய தடை பதிவுத்துறை அமைச்சரிடம் புகார்
நத்தம் பத்திரப்பதிவு செய்ய தடை பதிவுத்துறை அமைச்சரிடம் புகார்
நத்தம் பத்திரப்பதிவு செய்ய தடை பதிவுத்துறை அமைச்சரிடம் புகார்
நத்தம் பத்திரப்பதிவு செய்ய தடை பதிவுத்துறை அமைச்சரிடம் புகார்
ADDED : ஜூன் 21, 2024 11:43 PM
அன்னுார்;நத்தம் குடியிருப்பில் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சரிடம் நேற்றுமுன்தினம் மனு அளிக்கப்பட்டது.
அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த 15 மாதங்களாக, நத்தம் குடியிருப்பு பகுதியில் உள்ள மனை, வீடு ஆகியவற்றை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு சில சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த தடை நீக்கப்பட்டும், அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளில் இந்த தடை தொடர்கிறது.
இதனால், ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் நிலத்தை விற்க முடியாமல், வாங்க முடியாமல் அடமானம் செய்ய முடியாமல், கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்னுார் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், நேற்றுமுன்தினம் சென்னையில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியிடம் நேரில் 'அன்னுார் சார்பதிவாளர் அலுவலக எல்லையில் உள்ள நத்தம் குடியிருப்பு இடங்களை பத்திர பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கோரி மனு அளித்தார். இதுகுறித்து உடனடியாக பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார்.