/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுகாதார சீர்கேட்டால் தவிப்பு; கலெக்டரிடம் புகார் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு; கலெக்டரிடம் புகார்
சுகாதார சீர்கேட்டால் தவிப்பு; கலெக்டரிடம் புகார்
சுகாதார சீர்கேட்டால் தவிப்பு; கலெக்டரிடம் புகார்
சுகாதார சீர்கேட்டால் தவிப்பு; கலெக்டரிடம் புகார்
ADDED : ஜூன் 11, 2024 11:46 PM

சூலுார்;அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், கொச்சின் ரோட்டில் கொட்டப்படும் பவுண்டரி மண் மற்றும் தனியார் பள்ளி அருகே கொட்டப்படும் மீன் கழிவுகளால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் அடுத்து அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள கொச்சின் ரோட்டுக்கு அருகில், உள்ள இடங்களில் பவுண்டரி மண் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுகளை கொட்டும் வாகனங்களை பிடித்து , கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தாசில்தாரிடம் புகார் அளித்தும் பலனில்லை, என, மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கலங்கல் கிராமத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், 'அப்பநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி எதிரில் உள்ள தோட்டத்தில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. மீன் கழிவுகளை கொத்திக்கொண்டு வரும் பறவைகள் பல இடங்களில் போட்டுவிடுகிறது. நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.