ADDED : ஜூலை 18, 2024 12:16 AM
கோவை : கோவை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
லோக்சபா தேர்தல், கோவை மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட்டதற்காக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், தேர்தல் நடத்தும் அலுவலரின் தனிப்பிரிவு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சிறப்பு பிரிவினர் மற்றும் தேர்தல் பிரிவில் பணியாற்றிய அலுவலர்களுக்கு, கலெக்டர் கிராந்திகுமார், நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.