/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி வந்தாச்சு! கோவை ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி வந்தாச்சு!
கோவை ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி வந்தாச்சு!
கோவை ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி வந்தாச்சு!
கோவை ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி வந்தாச்சு!
ADDED : ஜூலை 09, 2024 11:39 PM

கோவை:கோவையில் உள்ள, 1253 ரேஷன் கடைகளுக்கு, கருவிழி பதிவு கருவிகள் வழங்கப்பட்டுவிட்டன.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்த பின், பொருட்கள் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.
ஆனால் ரேஷன் கார்டு தாரர்கள் பலருக்கு, கைரேகை பதிவு விழுவதில்லை. அவர்களில் பலர், வழங்கல் அலுவலரிடம் சான்று பெற்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வாக, இப்போது கருவிழி பதிவு பெறும் வசதி, ரேஷன் கடைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''கோவையில் உள்ள 1253 ரேஷன் கடைகளுக்கு, கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைரேகை பதிவு விழாதவர்கள், இனி கருவிழி பதிவு செய்து பொருட்கள் வாங்கி கொள்ளலாம். கைரேகை பதிவுக்கு என, தனியாக சான்று பெற தேவையில்லை,'' என்றார்.