/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.எஸ்.டி., விகிதங்களை குறைக்க வேண்டும் ;மத்திய அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல் ஜி.எஸ்.டி., விகிதங்களை குறைக்க வேண்டும் ;மத்திய அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., விகிதங்களை குறைக்க வேண்டும் ;மத்திய அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., விகிதங்களை குறைக்க வேண்டும் ;மத்திய அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., விகிதங்களை குறைக்க வேண்டும் ;மத்திய அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 11:14 PM
கோவை;'ஜி.எஸ்.டி., விகிதத்தை 5 சதவீதம், 10 சதவீதம் மற்றும், 15 சதவீதமாக குறைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதம்:
அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கையை, ரிசர்வ் வங்கி கட்டாயமாக்க வேண்டும். வங்கிகள் கடன் வழங்கத் தயங்குவதால், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
மூலதன கடன் அனுமதி வரம்பை அதிகரிக்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ., கடன்களுக்கான இணைப் பத்திரமாக, விவசாய நிலங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கூட்டாண்மை நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை, 20 சதவீதமாக குறைக்க வேண்டும். தனி நபர்களுக்கு, 5 லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தை, ஜி.எஸ்.டி.,க்கு கீழ் கொண்டு வர வேண்டும். தற்போதைய ஜிஎஸ்டி விகிதத்தை, 5 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 15 சதவீதமாக குறைக்க வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த, அனைத்து அடுக்குகளிலும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., குறைக்க வேண்டும். சிமென்ட் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதங்களை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும்.
முந்தைய ஆட்சியில் உற்பத்தி செய்யும் பணிகளுக்கு, சேவை வரியில் விலக்கு அளிக்கப்பட்டது; அதே கொள்கையை அரசு தொடர வேண்டும். வேலை செய்யும் பணியாளர்களின் சேவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இ--வே பில் காலாவதியானால், அடுத்த வேலைநாளுக்கு தானாக மாற்ற வேண்டும்.
இ-வே பில் நேரம் முடிவதற்குள், சரக்குகளை இறக்க முடியாமல் போகலாம். வரி செலுத்துவோர், தங்கள் வளாகத்தில் பொருட்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்.
இதுபோன்ற தருணங்களில், பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
சரக்குகள் ஏற்றுமதிக்கான நேரம், விலை பட்டியல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் இருப்பதை, 180 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.