/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வடிகால் வசதியில்லாத நகர சாலைகள் மழை நீர் தேங்குவதால் 'பொத்தல்' வடிகால் வசதியில்லாத நகர சாலைகள் மழை நீர் தேங்குவதால் 'பொத்தல்'
வடிகால் வசதியில்லாத நகர சாலைகள் மழை நீர் தேங்குவதால் 'பொத்தல்'
வடிகால் வசதியில்லாத நகர சாலைகள் மழை நீர் தேங்குவதால் 'பொத்தல்'
வடிகால் வசதியில்லாத நகர சாலைகள் மழை நீர் தேங்குவதால் 'பொத்தல்'
ADDED : ஜூன் 25, 2024 01:57 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், வடிகால் வசதி இல்லாத காரணத்தால், மழை வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்காமல் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.
பொள்ளாச்சி நகரில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி சாலைகளில் ஏற்கனவே விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இச்சாலைகளில் தேங்கும் நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதிகள், ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால், மழையின் போது, சாலையில் தேங்கும் தண்ணீரால், ஆங்காங்கே 'பொத்தல்' ஏற்படுகிறது. குழிகளில் வாகனங்கள் இறங்கி, ஏறும் போது நாளடைவில் பெரிய பள்ளமாக மாறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது இத்தகைய அவலம் காணப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழையால், பல இடங்களில் சாலைகள், சேதமடைந்து காணப்படுகின்றன. பொத்தலான சாலைகளை உடனுக்குடன் சரி செய்தால் மட்டுமே, பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கை, தொய்வு நிலையிலேயே உள்ளது.
மக்கள் கூறியதாவது:
சாலையோரங்களில் நடைபாதை அமைப்பது, முக்கிய சாலைகள் சந்திக்கும் ரவுண்டானா பகுதிகளை சீரமைப்பது, மழைநீர் வடிந்து செல்ல சாலையோரத்தில் வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது, சாலை விதிகள் பற்றிய அறிவிப்புகளை வைப்பது உள்ளிட்டவை முழுமை பெறாமல் உள்ளது.
இவைகள், அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே சாலைகள் சேதமடையால் சீரான போக்குவரத்து இருக்கும். தேர்முட்டி, தெப்பக்குளம் வீதி, ராஜாமில்ரோடு உள்ளிட்ட நகர சாலைகளில் வாகனங்கள் இயக்குவது சிரமமாக உள்ளது.
மேலும், சாலையோரங்களில், நடைபாதை அமைக்கப்பட்டும், மழைநீர் சென்று கலக்கும் வகையில், ஆங்காங்கே துவாரங்கள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் கழிவுகளுடன் தேங்கும் மழை நீர், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.சாலையும் உருக்குலைந்து உள்ளது.
இவ்வாறு, கூறினர்.