/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மத போதகர் கால்வின் மீது சர்ச் உறுப்பினர் புகார் மத போதகர் கால்வின் மீது சர்ச் உறுப்பினர் புகார்
மத போதகர் கால்வின் மீது சர்ச் உறுப்பினர் புகார்
மத போதகர் கால்வின் மீது சர்ச் உறுப்பினர் புகார்
மத போதகர் கால்வின் மீது சர்ச் உறுப்பினர் புகார்
ADDED : ஜூலை 04, 2024 11:16 PM

கோவை:கோவை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் ஜூன், 16ம் தேதி நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், மதபோதகர் பிரின்ஸ் கால்வின், மத பிரிவினைவாதத்தை துாண்டும் வகையில் பேசினார். ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்னமும் அவரை கைது செய்யவில்லை.
இச்சூழலில், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, அந்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் நேற்று புகார் மனு அளித்தார். சர்ச் உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் என்பவர் அளித்த புகார் மனுவில், 'பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மத நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எங்கள் சர்ச் பலிபீடத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.