/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சொக்கலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சொக்கலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
சொக்கலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
சொக்கலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
சொக்கலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 15, 2024 02:25 AM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவில், ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள், கோபுரங்கள், வண்ணம் பூசப்பட்டு பணிகள் நிறைவடைந்து கடந்த, 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
முதல் கால வேள்வி, வேதிகார்ச்சனை, கும்ப அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து, வேத பாராயணங்கள், தேவாரம், திருவாசக பாராயணங்கள், 108 மூலிகை பொருட்கள் ஹோமம், கோபுர கலசங்கள் ஸ்தாபிதம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
கும்பாபிஷேக விழா, அதிகாலை, 3:00 மணிக்கு தொடங்கியது. தீபாராதனை, புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சிவாச்சாரியார்கள் அதிகாலை, 5:45 மணி அளவில் ராஜகோபுரம், கலசங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதி, கோபுர கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. அன்னதான நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.
விழாவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், சிவானந்தா தவக்குடில் ஸ்வயம் பிரகாஷ் ஆனந்த சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் திருவருள் தவநெறி மன்றத்தினர் செய்து இருந்தனர்.