/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையில் வீணாக சென்ற குடிநீரில் குளித்து கும்மாளமிட்ட குழந்தைகள் சாலையில் வீணாக சென்ற குடிநீரில் குளித்து கும்மாளமிட்ட குழந்தைகள்
சாலையில் வீணாக சென்ற குடிநீரில் குளித்து கும்மாளமிட்ட குழந்தைகள்
சாலையில் வீணாக சென்ற குடிநீரில் குளித்து கும்மாளமிட்ட குழந்தைகள்
சாலையில் வீணாக சென்ற குடிநீரில் குளித்து கும்மாளமிட்ட குழந்தைகள்
ADDED : ஜூலை 21, 2024 12:51 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் -- அன்னூர் சாலையில், வீணாக சென்ற குடிநீரில் குழந்தைகள் குளித்து கும்மாளம் போட்டனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், சாமண்ணா நீரேற்று நிலையம் அருகே, திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது.
புதிதாக திருப்பூர் மாநகராட்சி நான்காவது குடிநீர் திட்டம், ரூ.1,120 கோடியே, 57 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, நாள் ஒன்றுக்கு, 15 கோடியே 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதனிடையே மேட்டுப்பாளையம் -- அன்னூர் சாலையில், காந்திபுரம் அருகே சாலையோரம், திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயின் ஏர் வால்வு நேற்று உடைந்து, பல லட்சம் லிட்டர் தண்ணீர், சாலையில் வீணானது. இந்த தண்ணீரில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் குளித்து கும்மாலம் போட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற, மேட்டுப்பாளையம் நகராட்சி துணை தலைவர் அருள்வடிவு, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஏர் வால்வு சரி செய்யப்பட்டது.