Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கள் வரத்து குறைவு விலையில் மாற்றம்

காய்கள் வரத்து குறைவு விலையில் மாற்றம்

காய்கள் வரத்து குறைவு விலையில் மாற்றம்

காய்கள் வரத்து குறைவு விலையில் மாற்றம்

ADDED : ஜூன் 23, 2024 11:14 PM


Google News
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து குறைந்தும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கள் விலை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 720, தேங்காய் 16(ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) -35, முருங்கைகாய் -- 150, வெண்டைக்காய் - 50, பூசணிக்காய் - 17, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 76, புடலை - 20, சுரைக்காய் - 25, பீர்க்கங்காய் - 70, பச்சை மிளகாய் - 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரத்தை விட தற்போது காய்களின் விலை மாறுபட்டுள்ளது. இதில், கத்தரிக்காய் - 15 ரூபாய், பூசணிக்காய் - 12, பீக்கன்காய் - 10, பச்சைமிளகாய் - 20 ரூபாய் விலை சரிந்துள்ளது.

இந்த வாரம் அதிகபட்சமாக, முருங்கைக்காய் கிலோவுக்கு, 90 ரூபாயும், பாகற்காய் - 16 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us