/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் மூன்று நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு கோவையில் மூன்று நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
கோவையில் மூன்று நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
கோவையில் மூன்று நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
கோவையில் மூன்று நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:11 AM
கோவை : கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு, லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று 45 மி.மீ., நாளை 32 மி.மீ., 20ம் தேதி 3 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை, 25 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 முதல் 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 40 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு, 18 முதல் 22 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.
வரும் 3 நாட்களுக்கு, மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழையைப் பயன்படுத்தி, 18 முதல் 22 நாட்களான நான்கு இலை வயதில் உள்ள நெல் நாற்றுகளை நடவு செய்யலாம்.
வரும் பருவத்தில் நிலக்கடலை விதைக்க ஏதுவாக, நிலத்தை தயார்படுத்தலாம். கொடி பூசணி வகைகளை, போதுமான வடிகால் வசதி செய்து விதைக்க, பல்கலை அறிவுறுத்தியுள்ளது.