/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் வைபவம் அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் வைபவம்
அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் வைபவம்
அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் வைபவம்
அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் வைபவம்
ADDED : ஜூலை 15, 2024 02:31 AM

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.
சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் திருநட்சத்திர வைபவம் மற்றும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அதிகாலை நடைதிறந்து மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
கால சந்தி பூஜை முடிந்தபின், உற்சவ மூர்த்தி சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சிம்மாசனம் முன் எழுந்தருளினார். அங்கு உபச்சாரங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து திருவாராதானம், மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் சாற்றுமுறை சேவித்தனர். அதை தொடர்ந்து மங்கள ஆரத்தியும், பிரசாதமும் வழங்கப்பட்டது.