/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் உலாவும் கால்நடைகள்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்! ரோட்டில் உலாவும் கால்நடைகள்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்!
ரோட்டில் உலாவும் கால்நடைகள்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்!
ரோட்டில் உலாவும் கால்நடைகள்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்!
ரோட்டில் உலாவும் கால்நடைகள்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்!

சுகாதாரம் பாதிப்பு
பொள்ளாச்சி, சிங்காநல்லூர் நீர்நிலையில், பிளாஸ்டிக் கழிவு மற்றும் காலி மது பாட்டில்கள் குப்பை போன்று வீசப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் மாசடைந்துள்ளது. பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து சுத்தம் செய்ய வேண்டும்.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
கிணத்துக்கடவு - சென்றாம்பாளையம் செல்லும் ரோட்டில், இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் பயணியர் செல்ல சிரமப்படுகின்றனர். சிலர் தங்கள் கால்நடைகளை மாலை நேரத்தில் இவ்வழியாக அழைத்து செல்ல அச்சப்படுவதால், இந்த ரோட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
ரோட்டை சீரமைக்கணும்!
கிணத்துக்கடவு, நல்லட்டி பாளையத்தில் இருந்து பட்டணம் செல்லும் பிரதான ரோடு சிதிலமடைந்து உள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. வாகன ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைகளால் தொல்லை
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் பகுதியில் கால்நடைகள் அதிக அளவு ரோட்டில் நடமாடுவதால், வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ரோட்டோரத்தில் உள்ள குப்பையை மாடுகள் இழுத்து ரோட்டில் சிதற விடுவதால், சுகாதாரம் பாதிக்கிறது. எனவே, கால்நடைகளை கட்டுப் படுத்த வேண்டும்.
ரோட்டோரத்தில் குப்பை
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, வி.என்.டி., நகர் ரோட்டரி கிளப் அருகே, ரோட்டின் ஓரத்தில் குப்பை வீசப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குப்பையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளை பட்டைகளால் அவதி
பொள்ளாச்சியில், பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு, பல்லடம் ரோடுகளில், அதிக தடிமனில் வெள்ளை நிற பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களில், வயதானவர்கள், கர்ப்பிணிகள் பயணிக்கும் போது, அதிக அதிர்வு ஏற்பட்டு பாதிக் கின்றனர். வெள்ளை பட்டைகளின் தடிமனை குறைக்க வேண்டும்.
பராமரிக்க வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்டில், நகராட்சி இலவச கழிப்பிடம் செயல்படுகிறது. இது முறையாக பராமரிக்கப்படாததால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நகராட்சியினர் இந்த இலவச கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ந்து வரும் செடிகள்
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை-பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதில் தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால், காய்ந்து பொலிவிழந்து வருகிறது. எனவே, நகராட்சியினர் இச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.
கழிவுகள் வீச்சு
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், மின்மயானம் அருகே கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் வீசப்படுகின்றன. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுகளை கொட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை வேண்டும்.
அழகுபடுத்த வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் மண் போடப்பட்டுள்ளது. இது பராமரிப்பின்றி பொலி விழந்து காணப்படுகிறது. இங்கு செயற்கை நீருற்று, செடிகள் வளர்த்து அழகுபடுத்த நகராட்சி யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றணும்
உடுமலை ராஜேந்திரா ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் போடப்படுகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியினர் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
குடிநீர் குழாய் உடைப்பு
உடுமலை அருகே தீபாலபட்டியில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால், குடிநீர் வீணாகி வருகிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.