/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை கிடங்கு காவலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு குப்பை கிடங்கு காவலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு
குப்பை கிடங்கு காவலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு
குப்பை கிடங்கு காவலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு
குப்பை கிடங்கு காவலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2024 10:15 PM
போத்தனூர்:போத்தனூர், செட்டிபாளையம் சாலையிலுள்ள மாநகராட்சி குப்பை கழிவு சேகரிப்பு கிடங்கின் காவலாளி கணேஷபாண்டியன், 25. கடந்த, 5ம் தேதி இரவு உடன் பணிபுரியும் பால்ராஜ் என்பவருக்கு, சம்பளத் தொகை கொடுக்க, கோணவாய்க்கால்பாளையம், ராமசாமி வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த இருவர், பால்ராஜை வெளியே அழைத்து பேசிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் கணேஷபாண்டியன், வெளியே சென்று பால்ராஜை அழைத்தார். அவ்விருவரும் கணேஷபாண்டியனை தகாத வார்த்தைகளால் திட்டினர். செங்கல்லால் தலையில் தாக்கியதில் காயமேற்பட்டது.
கணேஷபாண்டியன் புகாரில், போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி, 28 மற்றும் தாமோதரன் ஆகியோரை தேடுகின்றனர்.