/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முத்தரசன், ராமகிருஷ்ணன் உட்பட 626 பேர் மீது வழக்கு முத்தரசன், ராமகிருஷ்ணன் உட்பட 626 பேர் மீது வழக்கு
முத்தரசன், ராமகிருஷ்ணன் உட்பட 626 பேர் மீது வழக்கு
முத்தரசன், ராமகிருஷ்ணன் உட்பட 626 பேர் மீது வழக்கு
முத்தரசன், ராமகிருஷ்ணன் உட்பட 626 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2024 11:58 PM
கோவை.:மத்திய பட்ஜெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இ.கம்யூ., முத்தரசன், மா.கம்யூ., ராமகிருஷ்ணன் உட்பட, 626 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று முன்தினம் இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், 74, மற்றும் மா.கம்யூ., மாநில அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், 74, மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முத்தரசன், ராமகிருஷ்ணன் மற்றும் மா.கம்யூ., மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன், 59, உட்பட கட்சியினர், 626 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடி, போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிந்தனர்.