/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:39 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு, தோட்டக்கலை துறை சார்பில் மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை சார்பில் ஏராளமான மானிய திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2024 - 25ன் கீழ் தென்னை பரப்பு விரிவாக்கம் செய்ய, 20 ஹெக்டேர் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஹெக்டேருக்கு, 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்ய, இரண்டு ஹெக்டேர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஹெக்டேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
காளான் வளர்ப்புக்கு, 600 சதுர அடிக்கு, ஒரு குடில் அமைக்க, 30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வாழையில் ஊடுபயிர் சாகுபடி செய்ய, 30 ஹெக்டேர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஹெக்டேருக்கு, 17,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
மரவள்ளியில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு, 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மொத்தமாக, 15 ஹெக்டேர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தென்னை உற்பத்தியை அதிகரிக்க, 55 ஹெக்டேர் நிலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஹெக்டேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டத்தை பெற முன் பதிவு செய்ய வேண்டும். மற்றும் உழவன் செயலி வாயிலாக முன் பதிவு செய்யலாம். அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்யலாம்.
மானிய திட்டங்களை பெற, சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, எப்.எம்.பி., வரைபடம், பேங்க் பாஸ் புக் போன்ற ஆவணங்களின் நகல், போட்டோ ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.
சிறு விவசாயிகள் வரும் போது, சிறு விவாசாயசான்று அவசியம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு, கூட்டு சிட்டா இருப்பின் உரிமை சான்று அவசியம். மேலும், விபரங்கள் அறிய கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.