Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடியில் ஆன்மிக பயணம் போலாம் வாங்க! அழைக்கிறது ஹிந்து சமய அறநிலையத்துறை

ஆடியில் ஆன்மிக பயணம் போலாம் வாங்க! அழைக்கிறது ஹிந்து சமய அறநிலையத்துறை

ஆடியில் ஆன்மிக பயணம் போலாம் வாங்க! அழைக்கிறது ஹிந்து சமய அறநிலையத்துறை

ஆடியில் ஆன்மிக பயணம் போலாம் வாங்க! அழைக்கிறது ஹிந்து சமய அறநிலையத்துறை

ADDED : ஜூலை 14, 2024 01:28 AM


Google News
பொள்ளாச்சி;ஆடி மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணம் குறித்து, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், ஆடி மாதத்தில் புகழ் பெற்ற அம்மன் கோவில்களுக்கு, 1,000 மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு மற்றும்அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு, 1,000 மூத்தகுடிமக்கள் அழைத்து செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

அதில், கோவை மண்டலத்தில், கோவை கோனியம்மன், தண்டுமாரியம்மன், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஆடி மாத ஆன்மிக பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது வரும், 19, 26 மற்றும் ஆகஸ்ட், 2 மற்றும்,9 ஆகிய நாட்களில் தொடங்குகிறது. 60 - 70 வயதுக்குஉட்பட்ட மூத்த குடிமக்கள்,வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பக்தர்கள் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 - 70 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வயது சான்றிதழ் இணைக்க வேண்டும். பக்தர்களுக்கு போதியஉடல் தகுதி இருத்தல் வேண்டும்.

பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும்;சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை. ஆதார் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு) இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் ஹிந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோவில் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை வலைதளம், hrce.tn.gov.in, வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருமான சான்று பெற்று இணைக்க வேண்டும். பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் பங்கேற்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us