/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்
காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்
காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்
காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்
UPDATED : ஜூலை 29, 2024 07:50 AM
ADDED : ஜூலை 29, 2024 07:49 AM

தஞ்சாவூர் : காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய பகுதிகளில் முக்கிய நீர் ஆதாரங்களாக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகள் உள்ளன. அத்துடன், 36 கிளை ஆறுகள் பாய்கின்றன.
இந்நிலையில், அரசு விதிகளுக்கு புறம்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை, வருவாய் துறை, சுற்றுச்சூழல், வன பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முறைகேடுகளாக ஆற்றின் கரைகளில் செங்கல் சூளைகள், வீடுகள், வணிக நிறுவனங்கள், கான்கிரீட் சிமென்ட் கலவை தயாரிப்பு கூடங்கள் அமைக்க அனுமதி அளித்துள்ளனர்.
இதனால், கரைகள் மிகவும் பலவீனம் அடைந்து வருவதாகவும், கரைகளை பலர் உடைத்து பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
கல்லணையில் இருந்து பூம்புகார், வேதாரண்யம், பழையார் கடற்கரை வரை காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆற்றின் இருபுற கரைகளில் ஆங்கிலேயர் காலத்தில் 40 அடி சாலைகள் இருந்துள்ளன. அவை இப்போது இல்லை.
தற்போது நுாற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், கட்டடங்கள், விவசாய நிலங்கள், சிமென்ட் கலவை, தார் உற்பத்தி நிலையங்களால் ஆற்றின் கரைகள் பலவீனமாக மாறியுள்ளன.
பலவீனத்தை இனியும் அரசு அலட்சியப்படுத்தி கண்டு கொள்ளாமல் இருந்தால், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டது போல, பெருவெள்ள பேராபத்து காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு ஏற்படும். பேரழிவுகளுக்கு எவ்விதத்திலும் ஈடு கட்ட முடியாத பல நுாறு கிராமங்கள் பாதிப்புகளை சந்திக்கும்.
எனவே, மூத்த ஓய்வு பெற்ற நீர்வளத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் ஆலோசனைகளை பெற்றும்,வருவாய் துறையின் பழைய நில அளவை பதிவேடுகள் அடிப்படையில் முழுதுமாக நில அளவை கணக்கீடுகள் செய்து, தனியார் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக அகற்ற வேண்டும். ஆற்றின் கரைகளை நேரில் ஆய்வு செய்து கரைகளை மீட்டெடுத்து பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.