/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தம்பியை பீர் பாட்டிலால் அடித்த அண்ணன் கைது தம்பியை பீர் பாட்டிலால் அடித்த அண்ணன் கைது
தம்பியை பீர் பாட்டிலால் அடித்த அண்ணன் கைது
தம்பியை பீர் பாட்டிலால் அடித்த அண்ணன் கைது
தம்பியை பீர் பாட்டிலால் அடித்த அண்ணன் கைது
ADDED : ஜூலை 20, 2024 01:15 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வேடர் காலனியை சேர்ந்தவர் கோகில ராஜா, 41, கூலி தொழிலாளி. இவரது அண்ணன் யுவராஜ், 43 இவருடன் வசித்து வருகிறார்.
யுவராஜுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மன உளைச்சல் அடைந்த யுவராஜ், சரியாக வேலைக்கு செல்லாமல், அதிகமாக மது குடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு யுவராஜ், மது போதையில் கோகில ராஜாவை தகாத வார்த்தையால் திட்டி, பீர் பாட்டிலால் அடித்து காயப்படுத்தினார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து யுவராஜை கைது செய்தனர்.
-----