/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னையில் சமச்சீர் உரமிடல் 'அட்மா' திட்டத்தில் களப்பயிற்சி தென்னையில் சமச்சீர் உரமிடல் 'அட்மா' திட்டத்தில் களப்பயிற்சி
தென்னையில் சமச்சீர் உரமிடல் 'அட்மா' திட்டத்தில் களப்பயிற்சி
தென்னையில் சமச்சீர் உரமிடல் 'அட்மா' திட்டத்தில் களப்பயிற்சி
தென்னையில் சமச்சீர் உரமிடல் 'அட்மா' திட்டத்தில் களப்பயிற்சி
ADDED : ஜூலை 10, 2024 01:51 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே வெள்ளாளபாளையத்தில், சமச்சீர் உரமிடல் குறித்து பயிற்சி நடந்தது.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், 2024 - -25ம் ஆண்டின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ள வெள்ளாளபாளையம் கிராம விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டத்தில் சமச்சீர் உரமிடல், ரசாயன உர பயன்பாட்டை குறைத்தல் தொடர்பான பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி பேசுகையில், ''விவசாயிகள் பயிர்களில் இருந்து அதிக மகசூல் பெற, நீடித்த நிலையான மகசூல் தருகின்ற உயிர் உரங்கள், அங்கக உரங்கள், தொழு உரம், மண்புழு உரம் பயன்படுத்தி ஒருங்கிணைந்த உர நிர்வாக முறையை கடைபிடிக்க வேண்டும்,'' என்றார்.
மேலும், உரங்களை பிரித்து இடுவது குறித்து விளக்கினார். விவசாயிகள் எடுக்கும் மண் மாதிரிகளை, கோவை மண் பரிசோதனை மையத்தில் பரிசோதித்து, அவர்களது பரிந்துரையின்படி உரத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் (ஓய்வு) மகாலிங்கம் பேசுகையில், ''உயிர் உரங்கள் மற்றும் தொழு உரங்களை கொண்டு, ஊட்டம் இயற்றிய தொழு உரம் தயாரித்து அவற்றின் பயன்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்,'' என்றார்.
தென்னையில் சமச்சீர் உர பரிந்துரை மற்றும் நுண்ணுாட்ட பயன்பாட்டு அளவு முறைகள் பற்றியும் விளக்கினார்.
துணை வேளாண் அலுவலர் முருகன், நுண்ணீர் பாசனம் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் மகேஸ்வரி, உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'அட்மா' உதவி தொழில் நுட்ப அலுவலர்கள் செய்திருந்தனர்.