/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மோசடியில் கைதான சர்வேயர் ஜாமின் மனு மோசடியில் கைதான சர்வேயர் ஜாமின் மனு
மோசடியில் கைதான சர்வேயர் ஜாமின் மனு
மோசடியில் கைதான சர்வேயர் ஜாமின் மனு
மோசடியில் கைதான சர்வேயர் ஜாமின் மனு
ADDED : ஜூலை 11, 2024 11:48 PM
கோவை : பட்டா மாறுதல் மோசடியில் கைதான சர்வேயர் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார்,39. அதே அலுவலகத்தில் பீல்டு சர்வேயராக பணியாற்றி வரும் அருண் பிரதாப்,43, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மணிகண்டன்,36, ஆகியோர் சேர்ந்து, சார் ஆயவாளர் சுரேஷ்குமாருக்கு தெரியாமல், அவரது ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, பட்டா மாறுதல் செய்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமின் கோரி, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வரும், 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.