/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை இரவு உலா! 'பட்டாசு வீசினால் கடும் நடவடிக்கை' மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை இரவு உலா! 'பட்டாசு வீசினால் கடும் நடவடிக்கை'
மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை இரவு உலா! 'பட்டாசு வீசினால் கடும் நடவடிக்கை'
மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை இரவு உலா! 'பட்டாசு வீசினால் கடும் நடவடிக்கை'
மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை இரவு உலா! 'பட்டாசு வீசினால் கடும் நடவடிக்கை'
ADDED : ஜூலை 08, 2024 12:38 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், தினமும் உலா வரும் பாகுபலி யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 'யானை மீது பொதுமக்கள் பட்டாசு வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளான, தேக்கம்பட்டி, குரும்பனூர், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமப்பாளையம், சமயபுரம், காந்தையூர், லிங்காபுரம், உழியூர், மொக்கை மேடு என பல்வேறு பகுதிகளில், 'பாகுபலி' எனப்படும் ஒற்றை யானையின் நடமாட்டம் உள்ளது. ஊர் மக்களை தொந்தரவு செய்யாமலும், பயிர்களுக்கு சேதம் விளைவிக்காமலும் பாகுபலி யானை ஊருக்குள் உலா வருகிறது.
வேடிக்கை
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், பாகுபலி யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் இரவு, ஊட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் உள்ளே பாகுபலி யானை சென்று, வெளியே வந்தது. அதே போல் அதிகாலை நேரங்களில் சமயபுரம் பகுதியில், வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் பாகுபலி யானை உலா வருகிறது. இதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் உயிருக்கு பயந்து யானையை நோக்கி பட்டாசு வீசுகின்றனர்.
இதனால், அமைதியாக இருக்கும் யானை, ஆக்ரோஷமாகும் நிலை உள்ளது.
எச்சரிக்கை
மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், பாகுபலி யானையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். யானை விரட்டும் முயற்சியில் தனி நபர்கள் ஈடுபடக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
வனத்துறையினர் யானையை வீரட்டும் நேரத்தில், சிலர் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் யானைக்கு அருகில் சென்று விடுகின்றனர். இதனால், யானையை வனத்திற்குள் அனுப்ப சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசு மற்றும் வீடியோ எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள், ஊட்டி சாலையில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.