/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா? சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?
சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?
சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?
சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?
ADDED : ஜூலை 10, 2024 10:11 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சீருடை அணியாமலும், ஓட்டுநர் இருக்கையில் மற்றொருவரையும் அமர வைத்து ஆட்டோ இயக்கும், ஓட்டுநர்களின் அடாவடியைப் போலீசார் தடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரின் அடாவடி செயலால், பிற வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், சீருடை அணிவது கிடையாது. ஜீன்ஸ் பேன்ட் அல்லது லுங்கியுடன் ஆட்டோக்களை இயக்குகின்றனர். அதேபோல, எந்தவொரு திருப்பங்களிலும், 'இன்டிக்கேட்டர்' போடாமலும், அதிவேகமாகவும் பிற வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோக்களை இயக்குகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சாலையோரங்களை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தங்களை ஏற்படுத்துதல், ஷேர் ஆட்டோ என்ற பெயரில் அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் செல்வது, ஓட்டுநர் இருக்கையில் மற்றொருவரையும் அமரச் செய்தல் சிலர், அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய ஓட்டுநர்களைக் கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரில் இருந்து ஒரே ஊருக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட தொகை கேட்கின்றனர். ஆட்டோக்களில், மீட்டர் அடிப்படையிலான ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது கிடையாது.
இதுமட்டுமல்லாமல், விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டறிந்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்கக் கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.