/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில பெஞ்ச் பிரஸ் போட்டி பலத்தை காட்டிய வீரர்கள் மாநில பெஞ்ச் பிரஸ் போட்டி பலத்தை காட்டிய வீரர்கள்
மாநில பெஞ்ச் பிரஸ் போட்டி பலத்தை காட்டிய வீரர்கள்
மாநில பெஞ்ச் பிரஸ் போட்டி பலத்தை காட்டிய வீரர்கள்
மாநில பெஞ்ச் பிரஸ் போட்டி பலத்தை காட்டிய வீரர்கள்
ADDED : ஜூலை 09, 2024 11:51 PM

கோவை;மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட் லிப்ட் போட்டியில், வீரர் - வீராங்கனைகள் தங்கள் பலத்தை காட்டினர்.
ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, கோவை அமெச்சூர் பவர் லிப்டிங் சங்கம் சார்பில், 'ஐயன் டைடன்ஸ்' என்ற பெயரில், மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட் லிப்ட் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 140க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு எடைப்பிரிவு களில் நடத்தப்பட்ட போட்டியில், கோவை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
தொடர்ந்து, மதுரை மாவட்டம் இரண்டாமிடத்தையும், திருச்சி மூன்றாமிடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையினருக்கு கோப்பை, சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
பரிசுகளை, ஆர்.வி.எஸ்., கல்லுாரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் ஐயப்பதாஸ் ஆகியோர் வழங்கினர். உடற்கல்வி இயக்குனர்கள் சத்யா, கார்வேந்தனர், கோவை மாவட்ட அமெச்சூர் பவர் லிப்டிங் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.