/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெளிநாட்டில் இருந்தபடி... வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள் வெளிநாட்டில் இருந்தபடி... வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
வெளிநாட்டில் இருந்தபடி... வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
வெளிநாட்டில் இருந்தபடி... வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
வெளிநாட்டில் இருந்தபடி... வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்

'கொடிசியா' சார்பில், கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் 'அக்ரி இன்டெக்ஸ் - 2024' கண்காட்சி நடத்தப்படுகிறது. விதை விதைப்பது முதல் அறுவடைக்கு பின் உணவு, உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் வரை, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பு, உணவு பொருள் பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த ஏற்றுமதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கான தொழில்நுட்பங்கள் பிரமிக்க வைக்கின்றன!
ஈர்க்கும் இயந்திரங்கள்
உழவு செய்ய டிராக்டர்கள் இருந்தாலும், களை எடுக்க ஆட்களையே நம்பியிருந்தனர் விவசாயிகள். தற்போது அவற்றுக்கும் தீர்வாக, சிறு சிறு மினி டிராக்டர் முதல் கையால் களையெடுக்கும் இயந்திரங்கள் வரை அறிமுகமாகியுள்ளன.
தண்ணீர் பாய்ச்ச தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் இணைப்பு, தொலைத்தொடர்பு சேவைகளை கொண்ட கருவிகளை பயன்படுத்தி, விவசாய நிலத்துக்கு நீர் பாய்ச்சுதல், சொட்டுநீர் அமைத்தல், ஈரப்பதத்தை அறிதல், மோட்டர் இயக்குதல், மின்சார கருவிகளை கட்டுப்படுத்துதல் போன்றவைகளை உருவாக்கியுள்ளனர்.
மூன்று ரூபாய்க்கு மரக்கன்று
விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்தின் நலனுக்காகவும், ஈஷாவின் 'காவேரியின் கூக்குரல்' என்ற இயக்கம் சார்பாக, மண் பரிசோதனைகளை செய்து வருகிறது. 3 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. செண்பகம், மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, புளி, கடுக்காய், விளாம்பழம், வில்வம், கொய்யா, மாதுளை, சிறு நெல்லி, பெருநெல்லி, பாதாம் உள்ளிட்ட பூ மரம், நிழல் மரம், பழ மரக்கன்றுகள் ஒவ்வொன்றும், 7 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.