/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி! 'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!
'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!
'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!
'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!
ADDED : ஜூன் 03, 2024 01:36 AM

துடியலூர்;கோடை விடுமுறையை பெண்களும், குழந்தைகளும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற நோக்கில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'கலையும் கைவண்ணமும்' என்ற கோடைகால இலவச ஓவியம் வரைதல் ஆபரண தயாரிப்பு பயிற்சி, கோவை அபார்ட்மென்ட்களில் நடத்தப்பட்டு வருகிறது.
துடியலூரில், காசா கிராண்ட் காஸ்மாஸ் குடியிருப்பு வளாகத்தில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'கலையும் கைவண்ணமும்' ஓவிய பயிற்சி, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. குழந்தைகளும் பெண்களும், உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பெவிக்ரில் நிறுவனத்தைச் சேர்ந்த சுமிதா, ஆர்த்தி ஆகியோர் ஓவிய பயிற்சி, வெட்டி ஓட்டுதல், பசைகளை பயன்படுத்தும் முறை, வண்ணங்களை தேர்வு செய்தல், வண்ணங்களை பூசுதல் குறித்து, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கற்றுக் கொடுத்தனர். குழந்தைகள் இந்த ஓவிய பயிற்சியை கற்று உற்சாகம் அடைந்தனர்.
காசாகிராண்ட் காஸ்மாஸ் குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குஜன்ஸ் ஆருத்ரா அபார்ட்மென்ட்
தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள குஜன்ஸ் ஆருத்ரா அப்பார்ட்மென்டில் ஓவியம் வரைதல், ஆபரண தயாரிப்பு ஆகிய பயிற்சி வகுப்புகள் நடந்தன. அபார்ட்மென்டில் உள்ள குழந்தைகள், பெண்கள், இல்லத்தரசிகள் உற்சாகத்துடன் பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கு, 'பெவிகிரில்' நிறுவனத்தின் முன்னணி ஓவிய வல்லுனர்கள் மற்றும் சிறந்த ஆபரண தயாரிப்பாளர்கள், பயிற்சி அளித்தனர்.
ஆருத்ரா வெல்பேர் அசோசியேஷன் இணைச் செயலாளர் அசோக்குமார், தலைவர் வாசுதேவன், முன்னாள் தலைவர்கள் நந்தகோபால், முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ தக் ஷா சான்ஸ்ரே பேஸ் 2
வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தக் ஷா சான்ஸ்ரே பேஸ் 2 அபார்ட்மென்டில் நடந்த பயிற்சியில், கேரளா முரல் பெயின்டிங்கில், கிருஷ்ணர் மற்றும் அன்னப்பறவை வரைதல், ஆப்பிரிக்க ஓவியங்கள் வரைதல், பென்டென்ட் ஆபரணம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சான்ஸ்ரே பேஸ் 2 பிளாட் ஓனர்ஸ் அசோசியேசன் பொருளாளர் சங்கரநாராயணன், ஒருங்கிணைப்பாளர் தேவி, தலைவர் ராஜாமணி, செயலாளர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.