/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரில் வந்து பஸ்களில் ஏறி கைவரிசை திருட்டு... கொஞ்சம் புதுசு! 4 பேர் கும்பல் கைது; 20 பவுன் மீட்பு:பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை காரில் வந்து பஸ்களில் ஏறி கைவரிசை திருட்டு... கொஞ்சம் புதுசு! 4 பேர் கும்பல் கைது; 20 பவுன் மீட்பு:பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
காரில் வந்து பஸ்களில் ஏறி கைவரிசை திருட்டு... கொஞ்சம் புதுசு! 4 பேர் கும்பல் கைது; 20 பவுன் மீட்பு:பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
காரில் வந்து பஸ்களில் ஏறி கைவரிசை திருட்டு... கொஞ்சம் புதுசு! 4 பேர் கும்பல் கைது; 20 பவுன் மீட்பு:பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
காரில் வந்து பஸ்களில் ஏறி கைவரிசை திருட்டு... கொஞ்சம் புதுசு! 4 பேர் கும்பல் கைது; 20 பவுன் மீட்பு:பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 02:44 AM

கோவை:திருடர்கள் உயர்ரக உடையணிந்து, படுடீசன்டாகவும் வருவார்கள்; ஏன்... காரில் கூட வருவார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. கோவையில் காரில் வந்து திருடிச்செல்லும் கும்பல் பிடிபட்டுள்ளது. இவர்களிடம் இருந்து, 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் உட்பட பகுதிகளில் பிக்பாக்கெட், பஸ்களில் நகை திருட்டு நடப்பதாக, தொடர் புகார்கள் வந்தன. இதேபோல மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு வாலிபரின் பையைபிளேடால் கிழித்து, 11 பவுன் நகை திருட்டு போனதாக புகார் வந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சசிகலா, பிராங்க்ளின், எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்திக், பூபதி, கில்பட் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சாதாரண உடையில், பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர். பல பிக்பாக்கெட் திருடர்களிடம் நடத்திய விசாரணையில், புதிதாக ஒரு கும்பல் வந்திருப்பதாக தெரிவித்தனர்.
போலீசார் பஸ், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி, அந்த புதிய திருடர்களை தேடி வந்தனர். அப்போது திருடர்கள் மருதமலை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.
மருதமலை வனப்பகுதியில் காரில் துாங்கிக் கொண்டு இருந்த, 4 பேர் கும்பலை பிடிக்க போலீசார் 'ஸ்கெட்ச்' போட்டனர். திட்டமிட்டு இரவில் சுற்றிவளைத்து பிடித்தனர்.
வடவள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கமல், 42, காமராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்கிற கிரி, 30, ரத்தினபுரியை சேர்ந்த ரமேஷ், 48, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கோழி ராஜன், 40 என்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து, 20 பவுன் தங்க நகைகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணைக்குப் பின், போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இவர்கள், காரில் ஏதாவது ஒரு பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கு காரை நிறுத்தி, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் பர்ஸ், நகைகளை திருடி, தப்பி விடுவார்கள்.
அதிக கூட்டம் உள்ள பஸ்களில் திருட்டில் ஈடுபடுவார்கள். கோழி ராஜா காரில் பஸ்சின் பின்னால் செல்வார். திருடிய பொருட்களுடன் இறங்கும் நண்பர்களை, காரில் பத்திரமாக கூட்டிச்சென்று விடுவார். திருடும் நகைகளை, விற்று பணமாக்கி பகிர்ந்து கொடுத்துள்ளார்.
திருட்டு பணத்தில், 4 பேரும் மது, நட்சத்திர ஓட்டல், சீட்டாட்டம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். விடுமுறை நாட்களில், வடமாநில தொழிலாளர்களே பொது இடங்களுக்கு வருவார்கள் என்பதாலும், அவர்களிடம் திருடினால் போலீசில் புகார் அளிக்கமாட்டார்கள் என்பதாலும், விடுமுறை நாட்களில் அவர்களிடம் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களிடமும் திருடி உள்ளனர். காரில் சென்று திருடினால், போலீசில் சிக்க மாட்டோம் என நினைத்து இருந்தார்கள். ஆனால் வசமாக சிக்கி விட்டனர். மேலும் விசாரித்து வருகிறோம். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ்களில் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களைப் போல் இன்னும் திருடர்கள் உள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட கமல், பிரசாந்த் ரமேஷ், கோழி ராஜன் ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.