/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்டா மாறுதலுக்கு முறைகேடாக அனுமதி அளித்த இருவர் கைது பட்டா மாறுதலுக்கு முறைகேடாக அனுமதி அளித்த இருவர் கைது
பட்டா மாறுதலுக்கு முறைகேடாக அனுமதி அளித்த இருவர் கைது
பட்டா மாறுதலுக்கு முறைகேடாக அனுமதி அளித்த இருவர் கைது
பட்டா மாறுதலுக்கு முறைகேடாக அனுமதி அளித்த இருவர் கைது
ADDED : ஜூன் 28, 2024 07:32 AM

கோவை : சார் ஆய்வாளர் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி பட்டா மாறுதலுக்கு அனுமதி அளித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிபவர் சுரேஷ்குமார், 39. கடந்த ஜன., 5ம் தேதி இவரது அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வரைவாளரின் பயனாளர் ஐ.டி., மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி, பட்டா மாறுதல் விண்ணப்பத்துக்கு மர்ம நபர் ஒருவர் அனுமதி அளித்துள்ளார்.
இதையறிந்த சுரேஷ்குமார், 'தங்களுடைய அனுமதி இல்லாமல் பட்டா மாறுதல் விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்ததுடன், அடுத்த கட்ட அனுமதிக்கு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநகர சைபர் கிரைம் போலீசில் கடந்த, 6ம் தேதி புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மோசடியில் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில், கள நிலஅளவையராக பணிபுரிந்து வரும், சவுரிபாளையம், கார்த்திக் நகரை சேர்ந்த அருண்பிரதாப், 43, கோவை கலெக்ட்ரேட் தேர்தல் பிரிவில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரியும், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 36 ஆகிய இருவரும் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.