/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதுநிலை முதலாமாண்டு சேர இப்போது விண்ணப்பிக்கலாம் முதுநிலை முதலாமாண்டு சேர இப்போது விண்ணப்பிக்கலாம்
முதுநிலை முதலாமாண்டு சேர இப்போது விண்ணப்பிக்கலாம்
முதுநிலை முதலாமாண்டு சேர இப்போது விண்ணப்பிக்கலாம்
முதுநிலை முதலாமாண்டு சேர இப்போது விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 28, 2024 12:39 AM
கோவை;தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், முதுநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
கோவை அரசு கல்லுாரி முதல்வர் எழிலி கூறியதாவது:
கோவை அரசு கலை கல்லுாரியில், இரண்டு சுழற்சி முறையில் 557 பேர் முதுநிலையில், 21 பிரிவுகளில் சேர்க்கப்படவுள்ளனர். மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக, 58 ரூபாய், பதிவு கட்டணம் 2 சேர்த்து, 60 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம், 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.முழுமையான விபரங்களை, இணையதளத்தில் பார்க்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 7 வரை சமர்ப்பிக்க, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுவதால், மாணவர்கள் கல்லுாரிகளுக்கு நேரடியாக வரவேண்டியதில்லை. விண்ணப்பிக்க இயலாதவர்கள், கல்லுாரி உதவி மையத்தை அணுகலாம்.
இவ்வாறு, முதல்வர் எழிலி கூறினார்.